சௌதி உணவகங்களில் இனி ஆண் - பெண் தனித்தனி நுழைவாயில் இல்லை » Sri Lanka Muslim

சௌதி உணவகங்களில் இனி ஆண் – பெண் தனித்தனி நுழைவாயில் இல்லை

IMG_20191209_102437

Contributors
author image

BBC

சௌதி அரேபியாவில் உள்ள உணவகங்கள் இனி ஆண்கள் – பெண்களுக்கு என்று தனித் தனி நுழைவாயில் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுவரை, அந்நாட்டில் உள்ள உணவகங்கள் குடும்பங்கள் மற்றும் பெண்களுக்கு என்று ஒரு நுழை வாயிலும் தனியாக வரும் ஆண்களுக்கு மட்டும் தனியாக ஒரு நுழைவாயிலும் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று இருந்தது.

எனினும், ஏற்கெனவே இந்த கட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறையில் தளர்ந்து வந்தது.

உணவகங்கள், காபிக் கடைகள், சந்திக்கும் இடங்கள் போன்றவை இத்தகைய பாலினப் பிரிவினை முறையை, அரசின் உத்தரவால்  கைவிட்டுள்ளது.

Web Design by The Design Lanka