விமான நிலையத்தில் அமைச்சர் » Sri Lanka Muslim

விமான நிலையத்தில் அமைச்சர்

IMG_20191210_053631

Contributors
author image

Editorial Team

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் முன்மாதிரியை அடியொட்டி நேற்று முன்தினம் (08) இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விமான நிலையத்தில் சாதாரண பயணிகள் பகுதி ஊடாக வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேபால் நாட்டின் காத்மண்டு நகருக்கு அவர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபுக்கள் செல்லும் பிரத்தியேக நுழைவுப் பாதையின் ஊடாக செல்ல முடியுமாக இருந்தும், சாதாரண பயணிகள் செல்லும் வழியில் அவர் விமானத்தில் ஏறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது முதலாவது வியத்தை மேற்கொண்டு இந்தியா சென்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீண்ட தூரம் நடந்து சாதாரண பயணிகள் செல்லும் பாதையில் விமானத்தை அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NJA

 

Web Design by The Design Lanka