அவருடைய ஆட்சிக் காலத்தில் புனைந்து கூறப்பட்ட பல கதைகளில் இதுவுமொன்று » Sri Lanka Muslim

அவருடைய ஆட்சிக் காலத்தில் புனைந்து கூறப்பட்ட பல கதைகளில் இதுவுமொன்று

IMG_20191210_100810

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Ajaaz

தருணத்துக்கேற்ப , அரசியல் சார்ந்த நையாண்டிக் கதைகளைப் புனைந்து கூறுவதில் சிங்கள மக்கள் வல்லவர்கள். இக்கதைகள் கிராமிய இலக்கியங்களுக்கு ஒப்பானவை .

ஜே .ஆர். ஜெயவர்தன 1977 – 1989 காலப் பகுதியில் இலங்கை அரசின் தலைவராக இருந்தார். தனது பதவியில் தொடர்ந்து நிலைத்திருக்க சாணக்கியமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். அவருடைய ஆட்சிக் காலத்தில் புனைந்து கூறப்பட்ட பல கதைகளில் இதுவுமொன்று

உலக நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் விருந்தளித்துக் கௌரவிக்க எண்ணிய இந்திரன் , இந்திரலோகத்துக்கு வரும்படி அனைவருக்கும் அழைப்பு விடுத்தான்.

தலைவர்களும் இந்திரலோகத்தை அடைந்தனர். ஒவ்வொரு நாட்டுத் தலைவரும் வந்தபோது இந்திரன் தனது ஆசனத்திலிருந்து இறங்கி வாசல்வரை சென்று வரவேற்று , அவரவர்க்குரிய ஆசனத்தில் அமரச்செய்துவிட்டு மீண்டும் தனது ஆசனத்தில் அமர்ந்துகொண்டான்.

இலங்கை அதிபர் ஜெ.ஆர். வந்தபோது , இந்திரன் தனது ஆசனத்திலிருந்து எழுந்து செல்லாமல் அமர்ந்தபடியே அவரை ‘ வாருங்கள் ‘ என்றழைத்து அவர் அமரவேண்டிய ஆசனத்தைச் சுட்டிக்காட்டி ‘ அமருங்கள் ‘ என்று சொன்னான்.

இதனைக் கண்ட இந்திராணி கணவனைப்பார்த்து , ‘ என்ன இது ? மற்றவர்களையெல்லாம் எழுந்து சென்று வரவேற்றீர்கள் . இவரை மாத்திரம் அமர்ந்திருந்தபடி வரவேற்கிறீர்களே ஏன் ? ‘ என்றாள்.

அதற்கு இந்திரன் சொன்னான் , ” அந்த ஆளை வரவேற்க நான் எழுந்து சென்றால் அவர் நேராக இங்கு வந்து என்னுடைய ஆசனத்தில் அமர்ந்துவிடுவார் . அதற்குப் பின் அவரை யாராலும் எழுப்ப முடியாது “

[வேறு எவருக்காவது இது பொருந்துகின்றது என நீங்கள் கருதினால் , அதற்கு நான் பொறுப்பாளியல்லேன் ]

Web Design by The Design Lanka