காங்கேயனோடை மாணவி ஜப்றாவின் உயிரிழப்பு » Sri Lanka Muslim

காங்கேயனோடை மாணவி ஜப்றாவின் உயிரிழப்பு

IMG_20191210_102037

Contributors

சியான்

காங்கேயனோடை மாணவி ஜப்றாவின் உயிரிழப்பு

2 மில்லிக்குப் பதிலாக 20 மில்லி மருந்தை வழங்குமாறு கூறியவர் வைத்தியரே

வெளி வரும் உண்மைகள்

ஜப்றா மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவள்.

காங்கேயனோடை பதுறு பள்ளிவாயல் பகுதியைச் சேர்ந்த உவைஸ் பாத்திமா ஜப்றாவுக்கு வயது 14

ஜப்றாவின் குடும்பத்தின் 4 பிள்ளைகள்

இதில் இரண்டாவது பிள்ளை ஜப்றாவாகும்.

ஜப்றாவின் தந்தை கூலிக்கு ஒரு ஹோட்டலில் வெயிட்டராக நிற்கின்றார்.

கல்வியில் ஆர்வம் காட்டிய ஜப்றா 10ம் ஆண்டை முடித்து 11ம் ஆண்டுக்கு சித்தியடைந்துள்ளார்.

காங்கேயனோடை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்தார்.

கடந்த வருடம் திடீரென ஏற்பட்ட புற்று நோய்த்தாக்கத்துள்ளான ஜப்றா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சையின் பயணாக தேறி வந்த நிலையில் மாதார்ந்தம் கிளிணிக் சென்று வந்துள்ளார்

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமையும் கிளிணிக் சென்ற ஜப்றாவுக்கு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

மாதார்ந்தம் 2 மில்லி மருந்தே தொடர்ந்து வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் அன்றைய தினம் வைத்தியர் 20 மில்லி மருந்தை ஜப்றாவுக்கு வழங்குமாறு வைத்திய அறிக்கையில் எழுதியுள்ளார்.

எழுதப்பட்ட மருந்தை பெறுவதற்காக அறிக்கை வைத்தியசாலையின் மருந்தகத்துக்கு சென்றுள்ளது.

மருந்தகத்தில் பிரதான மருந்து வழங்குனர் இருக்கத்தக்கதாக பயிற்சி மருந்தகர்கள் ஜப்றாவுக்கான மருந்தை தயாரித்துள்ளனர்.

20 மில்லி எண்பதால் மருந்து தயாரிக்கப்பட்டு மீண்டும் மருந்து விடுதிக்கு வந்துள்ளது.

இந்த 20 மில்லி மருந்தை ஜப்றாவுக்கு ஏற்ற முற்பட்ட நேரத்தில் மருந்தின் நிறம் வித்தியாசமாக இருந்ததால் ஜப்றா மருந்தை ஏற்ற முற்பட்ட தாதியைப் பார்த்து மிஸ் இது கூடிய மருந்தாக இருக்கின்றது போல வழமையாக தரும் மருந்து போலில்லையே என்று கேட்டுள்ளார். இதையடுத்து குறித்த தாதி உத்தியோகத்தர் பிரதான தாதியிடம் சென்று அந்தப் பிள்ளை இது அதிகரித்த மருந்து என்று கூறுகின்றது என்று கேட்க பிரதான தாதி உத்தியோகத்தர் வைத்தியர் எழுதிய வைத்திய அறிக்கையை எடுத்துப் பார்த்துள்ளார்.

அதில் 20 மில்லி என எழுதப்பட்டுள்ளது. வைத்தியரே எழுதியுள்ளார் நீங்கள் அதை ஏற்றுங்கள் எனக் கூற தாதியும் ஜப்றாவுக்கான மருந்தை ஏற்றியுள்ளார்.

இதையடுத்து சில நிமிடங்களில் ஜப்றாவின் உடல் நிலை மோசமடைந்துள்ளது.

வைத்தியரும் தாதியர்களும் பதற்ற மடையவே குழப்பமடைந்த வைத்;தியர் 20 மில்லி என எழுதப்பட்ட அறிக்கையில் 2.0 என 2க்கும் 0க்குமிடையில் ஒரு குத்து வைத்து; 2.0 என்றே எழுதியுள்ளேன் எனக் காட்டியுள்ளார் என தெரிய வருகின்றது.

பின்னர் அங்கு வந்த இந்தப் பிரிவுக்குப் பொறுப்பான புற்று நோய் பெண் வைத்திய நிபுணர் 20 மில்லி எழுதிய வைத்தியரை கடிந்து கொண்டதாகவும் இவ்வாறு 2.0 என எழுதுவதில்லையே என ஆத்திரமடைந்ததாகவும் தகவல்;கள் தெரிவிக்கின்றன.

மாணவி ஜப்றா மயக்க மடைய பின்னர் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இரத்த மாற்று சிகிச்சை செய்யப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு உயிரைக் காப்பாற்ற போராடினாலும் மாணவி ஜப்றாவின் உயிரைக் காப்பாற்ற முடிய வில்லை.
ஜப்றா திங்கட்கிழமை(09.12.2019) மாலை உயிரிழந்தார்.

(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்)

இதில் முதல் பிழை வைத்தியரையே சாரும் இரண்டாவது பிழை மருந்தக மருந்து வழங்குனரை சாரும் மூன்றாவது பிழை பிரதான தாதியையும் நான்காவது பிழை மருந்தை ஏற்றிய தாதியையும் சாரும் ஒட்டு மொத்தமாக அந்த பிரிவினரையே சாரும்.

இது ஒரு அலட்சியமாக இடம் பெற்றதா அல்லது தவறுதலாக இடம் பெற்றதா அல்லது வேனுமென்றே இடம் பெற்றதா என்று கேட்க வேண்டியுள்ளது.

இதற்கான முழுப் பொறுப்பையும் வைத்தியசாலை நிருவாகமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையைப் பொறுத்தவரைக்கும் அன்மைக்காலமாக பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருவதுடன் இவ்வாறான ஒரு சில சம்பவங்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

நீதிமன்றம் வரை சென்றுள்ள சம்பவங்களும் இங்கு பதிவாகின்றன.

வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் என்பவர்கள் உயிரைக்காப்பாற்ற போராடுகின்றவர்கள். அவர்களின் பணி மகத்தானது. ஆனால் இவ்வாறான சம்பவங்கள் மிகப் பெரும் கவலையை ஏற்படுத்தி நிற்கின்றது.

வைத்தியசாலை நிருவாகம் தவறுதலாக நடந்து விட்டது என்று பிள்ளையின் பெற்றோரிடத்தில் மன்னிப்புக் கோரி விட்டு இலேசாக நகர்ந்து சென்று விடலாம். ஆனால் பிள்ளையின் பெற்றோரினதும் குடும்பத்தினதும் கண்ணீரும் கவலையும் மிகப் பரிதாபமாக உள்ளது.

இவைகள் சட்டத்துக்கு முன் கொண்டு சென்றால் சட்டம் தன் கடமையை செய்யும். எனினும் ஜப்றாவின் குடும்பம் மிகவும் வறுமையானதாகும். தனது பிள்ளைக்கு நடந்த கதை போன்று மற்ற பிள்ளை யாருக்கும் நடக்க கூடாது என்றே அழுதழு பெற்றோர்கள் கூறுகின்றனர்.

Web Design by The Design Lanka