மொஹமட் ஷாபி விவகாரம் » Sri Lanka Muslim

மொஹமட் ஷாபி விவகாரம்

IMG_20191211_111107

Contributors
author image

Editorial Team

டொக்டர் மொஹமட் ஷாபியினால் பெண்கள் சிலர் கரு தரிப்பதை தடுக்கும் நோக்கில் வழங்கப்பட்டதாக கூறப்படும் மருந்துவகை தொடர்பில் இதுவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியன நியாயத்தை பெற்றுக் கொடுக்கவில்லை என நீதிக்கான தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த தொழிற்சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் குறித்த விடயம் தொடர்பில் கடந்த அரசாங்க காலத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களம் பக்கச் சார்பான விசாரணையை நடத்தியதாக தெரிவித்தார்.

இந்த குற்றச் சாட்டுக்கள் குறித்த அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சரத் வீரபண்டார, ´ஷாபி வைத்தியரை பொது நிர்வாக அமைச்சகத்திற்கு அழைத்து எனக்கு எதிராகவே விசாரணையை நடத்தப்பட்டது. எனக்கு எதிராகவே வாக்குமூலம் பெறப்பட்டது. அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதியாவார். அவர் பிரதான சாட்சியாளருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். அனைத்தும் கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்றன. இது ஒரு அரச ஒடுக்கு முறையாகும்.

எம்மை கைது செய்ய திட்டங்கள் தீட்டப்பட்டன. திசேரா, சானி அபேசேகரவை வழிநடத்தினார். 850 குற்றச்சாட்டுக்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அது குறித்து விசாரணை செய்வதற்கு பதிலாக பிரதிவாதியை விடுவித்து விசாரணைகளை நடத்தினர். நீதிமன்றத்தில் போலியான ஆவணங்கள் முன்வைக்கப்பட்டன. அதனால் பாதிக்கப்பட்ட தாய்மாருக்கு நியாயம் கிடைக்கவில்லை. ஆகவே, நியாயம் கிடைக்கும் வகையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியன செயற்பட வேண்டியது அவசியம்.´ என தெரிவித்தார். AD

Web Design by The Design Lanka