சர்ச்சைக்குரிய கருத்து » Sri Lanka Muslim

சர்ச்சைக்குரிய கருத்து

ranjan-ramanayake-2

Contributors
author image

Editorial Team

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கண்டி நீதிமன்றத்தில் கடமையாற்றும் டோல்கா ஊழியருடன் மேற்கொண்ட தொலைப்பேசி கலந்துரையாடல் சம்பந்தமான குரல் பதிவை இன்று சிங்களளே அமைப்பு வெளியிட்டது.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பௌத்த தர்மம் மற்றும் கத்தோலிக்க மதம் குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து குறித்த குரல் பதிவுகளும் இன்று ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தப்பட்டதுடன், அது குறித்து விசாரணை செய்யுமாறு மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர் அரசாங்கத்தை கேட்டுள்ளார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கண்டி நீதிமன்றத்தில் கடமையாற்றும் டோல்கா ஊழியருடன் மேற்கொண்ட தொலைப்பேசி கலந்துரையாடல் சம்பந்தமாக விசாரணை நடத்துமாறு கோரி சிங்களே அமைப்பு இன்று நிதி சேவை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்தது.

இதற்கடையில் ரஞ்சன் ராமநாயக்க ஒரு பெண்ணுடன் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் குறித்த குரல் பதிவையும் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டார்.

இந்த உரையாடலில் ரஞ்சன் ராமநாயக்க கௌத்தம புத்தர், யாசோதரா தேவி மற்றும் புனித கன்னி மரியாள் ஆகிய தெய்வங்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவிப்பதாக தேரர் தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த தேரர், ரஞ்சன் ராமநாயக்க பௌத்த தர்மம் மற்றும் கத்தோலிக்க மதம் குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தினால் ஏற்படும் பதிப்பு மற்றும் ஒழுக்கயீனத்தை கருத்திற்கொண்டு அததெணர தொலைக்காட்சியும் அது குறித்த குரல் பதிவுகளை ஒளிபரப்பு செய்யவில்லை என தேரர் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka