உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பணிகள் மீண்டும் » Sri Lanka Muslim

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பணிகள் மீண்டும்

IMG_20200118_095422

Contributors
author image

Editorial Team

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் நேற்று மாலையில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கையினை கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி தற்காலிமாக நிறுத்தியது. இந்த ஜனாதிபதி ஆணைக்குழு இதுவரை 39 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது. இதில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி உட்பட சமயத் தலைவர்களும்  அடங்குகின்றனர்.

முன்னாள் சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபர் மெரில் குணரட்ன நேற்று வாக்குமூலம் அளித்தார். விசாரணை ஆணைக்குழு இன்று காலை மீண்டும் கூடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka