உண்மையாளர்களை கண்டு கொண்டேன் .! » Sri Lanka Muslim

உண்மையாளர்களை கண்டு கொண்டேன் .!

IMG_20200118_101244

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

A.h.m.Boomudeen

கட்சிப் பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நான் பார்க்கின்றேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அதிகாரத்தோடும் பதவியோடும் இருக்கின்றபோது எம்முடன் இருக்கின்ற ஆதரவாளர்களையும் − அதிகாரமில்லாதபோது நம்மை அரவணைக்கும் ஆதரவாளர்களையும் அரசியலில் கண்கூடாக கண்டிருக்கின்றோம். பதவி இல்லாதபோது நம்மை அரவணைக்கும் ஆதரவாளர்களும் தொண்டர்களும் முக்கியஸ்தர்களுமே உண்மையான கட்சியின் நேசர்கள்.

அதேபோன்று பதவிகள் உள்ளபோது எம்மிடம் எந்த தேவைக்கும் வராதவர்கள். பதவிகள் போனபின்னர் வந்து, எம்முடன் உறவாடுவதும் உபசரிப்பதும் அவர்களின் உண்மையான மனித நேயத்தையும் சமூகப்பற்றையும் வெளிக்காட்டுகின்றது.

மக்கள் காங்கிரசின் வளர்ச்சி பலரின் தியாகங்கள் மூலம் கட்டியெழுப்பப்பட்டது. மன்னாரில் பிறந்த என்னை தேசியக் கட்சியின் தலைமையாக உயர்த்தியதும். ஒரு தசாப்தத்திற்கு மேலாக அமைச்சுப்பதவியை அலங்கரிக்க செய்ததும் பலரின் அயராத அர்ப்பணிப்புகள் தான்.

இறைவனின் உதவியுடன் வளர்ந்த இந்தக்கட்சியை இறைவனின் நாட்டம் இல்லாமல் எவருமே வீழ்த்தமுடியாது. கட்சித் தலைமையையும் கட்சியையும் அழிப்பதிலேயே ஈடுபட்டுக்கொண்டு இருப்பவர்கள் இன்னுமே தோல்விகளை தான் சந்தித்துக்கொண்டு இருக்கின்றனர்.

Web Design by The Design Lanka