பிக்கு ஒருவர் பலி! » Sri Lanka Muslim

பிக்கு ஒருவர் பலி!

die6

Contributors
author image

Editorial Team

ஹுங்கம பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் ஆணையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பொலிஸார் பிடிக்க முற்பட்ட போது அவர்கள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் இருந்த துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் அருகில் பயணித்த வேன் ஒன்றில் இருந்த பிக்கு ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த பிக்கு அக்குனுகொலபெலெஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பிக்குவின் சடலம் தற்போது அகுனுகொலபெலஸ்ஸ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Web Design by The Design Lanka