குடும்பமே விபத்தில் சிக்கிய சோகம் » Sri Lanka Muslim

குடும்பமே விபத்தில் சிக்கிய சோகம்

1528962946-accident-

Contributors
author image

Editorial Team

குருநாகல் – கண்டி பிரதான வீதியின் நுகவெல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தாய் மற்றும் குழந்தை உயிரிழந்துள்ளதுடன் தந்தை காயமடைந்துள்ளார்.

இன்று (14) காலை 07.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தாய், தந்தை மற்றும் மகள் ஆகிய மூவரும் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், அதே திசையில் முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மூவரும் கீழே விழுந்துள்ளனர்.

இதன்போது எதிர் திசையில் வந்த தனியார் பஸ் ஒன்றின் சக்கரத்தில் சிக்குண்ட மூன்று பேரும் படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த மூன்று பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தாயும், குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

அம்பத்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் தாய் ஒருவரும், இரண்டு வருடங்களும் 03 மாதங்களான பெண் குழந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கட்டுகஸ்தொட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Web Design by The Design Lanka