மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக திலீப் நவாஸூக்கு அரசியலமைப்பு சபை அனுமதி » Sri Lanka Muslim

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக திலீப் நவாஸூக்கு அரசியலமைப்பு சபை அனுமதி

Court

Contributors
author image

Editorial Team

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகக் கடமையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவை, உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (24) கூடிய அரசியலமைப்புப் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் சட்டத்தரணி யசந்த கோதாகொட உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவிக்கு ஏற்படும் வெற்றிடத்துக்கு ஏ.எச்.எம். திலீப் நவாஸை நியமிப்பதற்கும் அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்குறிப்பிட்ட பெயர்களை அரசியலமைப்புப் பேரவைக்குப் பரிந்துரைத்திருந்தார்.

சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல, சிவில் அமைப்பின் உறுப்பினர்களான என். செல்வகுமார், ஜாவிட் யூசுப் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Web Design by The Design Lanka