பௌத்த மக்கள் கவனம் செலுத்த வேண்டும் » Sri Lanka Muslim

பௌத்த மக்கள் கவனம் செலுத்த வேண்டும்

IMG_20200126_100102

Contributors
author image

Editorial Team

விகாரைகள் அமைப்பட வேண்டிய பகுதிகளை இனங்கண்டு அதன் பின்னர் குறித்த பகுதிகளில் விஹாரைகளை துரிதமாக அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளளார்.

ஹொரவத்பொத்தான குடாகம பகுதியில் அமைக்கப்பட்ட விகாரை ஒன்றை திறந்து வைக்கும் புனித நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்…

´1000 விகாரைகள் நாட்டில் உள்ளன. அவற்றில் பெரும்பாலான விகாரைகளில் பிக்குகள் இல்லை. இந்த நிலைமை பிரச்சினைக்குரியதாகும்.

என்னுடன் விளையாட குடும்பத்தில் 9 பேர் இருந்தனர். ஆனால் இன்று அவ்வாறு இல்லை ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் மாத்திரமே உள்ளனர்.

முன்பு துறவிகளாகுவதற்கு பிள்ளைகள் இருந்தனர். யுத்தம் செய்யக்கூடிய பிள்ளைகள் இருந்தனர். அதேபோல் விவசாயத்தில் ஈடுபடகூடிய பிள்ளைகள் இருந்தனர்.

ஆனால் இன்று இவற்றுக்கு அனுப்ப மக்கள் மத்தியில் பிள்ளைகள் இல்லை.

இந்த நிலைமை குறித்து பௌத்த மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Web Design by The Design Lanka