கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு » Sri Lanka Muslim

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

IMG_20200129_092134

Contributors
author image

Editorial Team

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் அதிக அளவில் இந்த வைரஸுக்கு பலியாகி உள்ளனர்.

வைத்தியசாலைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வுகான் நகரம் மட்டுமின்றி பல்வேறு மாகாணங்களில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரெயில்வே மற்றும் விமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நேற்று நிலவரப்படி கொரோனா வைரசுக்கு 107 பேர் பலியாகியிருந்தனர். அதன்பின், மேலும் 25 பேர் பலியானதையடுத்து, இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது.

சீனா முழுவதும் 6000 பேர் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Web Design by The Design Lanka