சுதந்திர தின கொண்டாட்டம் - கொழும்பில் உள்ள 15 பாடசாலைகள் மூடப்படும் » Sri Lanka Muslim

சுதந்திர தின கொண்டாட்டம் – கொழும்பில் உள்ள 15 பாடசாலைகள் மூடப்படும்

educat

Contributors
author image

Editorial Team

சுதந்திரதின கொண்டாட்டத்திற்கான பயிற்சி நடவடிக்கைகள் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள அரச, தனியார், சர்வதேச பாடசாலைகள் 15 இற்கு எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்கு அமைவாக டி.எஸ்.சேனநாயக்க, ரோயல், தேர்ஸ்டன், யசோதரா, மியூசியஸ், புனித பிரிஜெட் கன்னியர் மடம், மகளிர் வித்தியாலயம், கொழும்பு சர்வதேச பாடசாலை, விச்சேலி சர்வதேச பாடசாலை உள்ளிட்ட பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

கொழும்பு 12 – மிஹிது வித்தியாலயம், அல்- ஹிதாயாக வித்தியாலயம், அசோக வித்தியாலயம் என்பன திங்கட்கிழமை காலை 9.00 மணியில் இருந்து செவ்வாய்க்கிழமை வரை மூடப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பயிற்சி நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தங்குமிட வசதி வழங்குவதற்காக கொழும்பு மஹாநாம, பொல்வத்த புனித மைக்கல், புனித மேரி கனிஷ்ட வித்தியாலயம் என்பன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 5.00 மணி வரை மூடப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Web Design by The Design Lanka