மக்களை தவறான வழியில் இட்டுச் செல்ல வேண்டாம் - ஊடகங்களிடம் கோரிக்கை » Sri Lanka Muslim

மக்களை தவறான வழியில் இட்டுச் செல்ல வேண்டாம் – ஊடகங்களிடம் கோரிக்கை

IMG_20200203_085625

Contributors
author image

Editorial Team

கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய தொற்றுநோய் தடுப்பு பிரிவில் ஒரு வார காலத்திற்குள் 71 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை சேவைக்கான மருந்து உள்ளிட்ட அனைத்து தேவைகளும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன. வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவிலும் சிகிச்சை சேவைகளும் வழமைபோன்று இடம்பெற்று வருகின்றது.

அனைத்து சுகாதார பணியாளர்களும் அர்ப்பணிப்புடன் சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும், பொது மக்களை தவறான வழியில் இட்டுச்செல்லும் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடவேண்டாம் என்றும் ஊடகங்களிடம் கேட்டுக்கொள்வதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் அசித்த அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் புதிய கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய் தொற்று என சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் தற்போழுது அங்கொடை தேசிய தொற்றுநோய் தடுப்பு பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

200 வருட வரலாற்றைக்கொண்ட இந்த வைத்தியசாலையில் 10 வார்ட்டுக்கள் உண்டு. இங்கு நோயாளர் சிகிச்சைக்கான சகல வசதிகளும் உண்டு.
கொரோனா வைரஸினால் ஒரு பெண் மாத்திரமே பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திணைக்களம் என்ற ரீதியில் இது எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். இந்த சந்தேக நோயாளருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படும் ஏ பிரிவில் 9 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட சீன பெண்ணுடன் தொடர்புபட்ட இலங்கையைச் சேர்ந்த ஐவரும், ஏனையோர் வெளிநாட்டு பிரஜைகளும் ஆவர் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சையளிப்போர் எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காது பரந்துபட்ட சேவை அடிப்படையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka