காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை » Sri Lanka Muslim

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை

IMG_20200206_131830

Contributors
author image

Editorial Team

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 50 ஏக்கர் காணியை இலங்கை துறைமுக அதிகார சபைக்கு பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

06. காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம்

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக துறைமுகத்துக்கு அருகில் சுமார் 50 ஏக்கர் காணியை இலங்கை துறைமுக அதிகார சபையிடம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக, துறைமுகத்துக்கு அருகாமையில் 15 ஏக்கர் அரசாங்கத்துக்கு சொந்தமான காணி ஒன்றை 52 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டமைக்கு அமைவாக பொறுப்பேற்பதற்கும், தனியார் உரித்துடைமையின் கீழ் மேலும் 32 ஏக்கர் காணிக்கு இழப்பீட்டை செலுத்தி காணியை பெற்றுக்கொள்ளும் சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக பொறுப்பேற்பதற்கும், துறைமுகம் மற்றும் கடல் நடவடிக்கைகள் அமைச்சர் அவர்கள் முன்வைத்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka