கொரோனா குறித்து முதலில் எச்சரித்த மருத்துவர் உயிரிழப்பு » Sri Lanka Muslim

கொரோனா குறித்து முதலில் எச்சரித்த மருத்துவர் உயிரிழப்பு

IMG_20200207_094350

Contributors
author image

Editorial Team

சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து முதல் முதலாக எச்சரிக்கைவிடுத்த சீன மருத்துவர் லீ வென்லியாங் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் கொரோனா வைரஸ் காரணமாக மாபெரும் அச்சம் நிலவி வருகிறது. நாளுக்கு நாள் இதனால மக்கள் சீனாவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி உள்ளது.

மொத்தமாக 22 நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வுஹான் நகரில் இருக்கும் மீன் மார்க்கெட்டில் இது தோன்றி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்று சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங் தெரிவித்துவிட்டார். இந்த வைரஸ் வேகமாக பரவுகிறது.இதற்கு மருந்து கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது. இதன் வேகமாக நாங்கள் நினைத்தை விட அதிகமாக இருக்கிறது. நாளுக்கு நாள் வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. இதுவரை நோய் தாக்கப்பட்டவர்களை கண்காணித்து வருகிறோம். அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம், என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்போது எங்களால் உறுதியாக கூற கூடிய ஒரே விஷயம், இந்த வைரஸ் பரவுவதை எங்களால் தடுக்க முடியவில்லை, என்றுள்ளார். இதனால் தற்போது ஜி ஜிங்பிங் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஹாங்காங் போராட்டம் காரணமாக சீன அரசு நிறைய பிரச்சனைகளை சந்தித்தது. அதேபோல் இன்னொரு பக்கம் அமெரிக்காவின் வர்த்தக போரும் அந்த நாட்டை பாதித்தது தற்போது மிகப்பெரிய வைரஸ் அந்த நாட்டை கலங்க வைத்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 73 பேர் ஒரே நாளில் பலியான சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை 636 ஆகி உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 3143 பேர் இந்த நோய் தாக்குதலால் பலியாகி இருக்கிறார்கள். இந்த பெப்ரவரி மாத இறுதியில் பலி எண்ணிக்கை 2500 ஐ தாண்டும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அந்நாட்டு மக்களை இது அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மொத்தம் 31,161 பேர் சீனாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

Web Design by The Design Lanka