பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநர் அதிகாரிகளுக்கு உத்தரவு » Sri Lanka Muslim

பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநர் அதிகாரிகளுக்கு உத்தரவு

IMG_20200207_095158

Contributors
author image

Editorial Team

பல்கலைக்கழக பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் உயர்கல்வியில் சித்தியடையும் மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியைத் தெடர்வது வழமையான செயற்பாடாக இருந்து வருகின்றது. இதற்கு அமைவாக அண்மைக் காலமாக பகிடிவதை தொடர்பான பல குற்றச்சாட்டுக்களும், சம்பவங்களும் நடைபெற்று வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

எனினும் இன்றுவரை பல்கலைகழக மாணவர்கள் பகிடிவதை தொடர்பில் பல அசௌகரியங்களை சந்திப்பதும், கல்வி தொடர்பாக பல இழப்புக்களை சந்திப்பதும் இவர்கள் வழமையாக எதிர்கொள்ளும் சவால்களாக மாறிவருகின்றது.

வடமாகாணம் கல்வியை முதன்மைப்படுத்துகின்ற ஒரு மாகாணமாகும். ஆறநெறி பண்பாட்டுச் சூழல் நிலவுகின்ற இப்பிரதேசத்தில் இவ்வாறான சம்பவங்கள் பண்பாட்டினை சீர்குலைத்து, மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் பின்தங்கி இருக்கும் நிலையினையும் ஏற்படுத்தும்.

அண்மையில் யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவியிடம் தொலைபேசி மூலம் பகிடிவதை மேற்கொள்ளப்பட்டதாக மாணவியின் பெற்றோர் வடமாகாண ஆளுனரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து பகிடிவதை மேற்கொண்டவர்களுக்கு எதிராகவும் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் முகமாகவும் வட மாகாண ஆளுநரின் விசேட கவனத்தின் கீழ் உடனடியாக பணிக்கப்பட்டது

இதற்கு அமைவாக இன்று (07.02.2020) காலை 10.00 மணியளவில் பல்கலைக்கழக அதிகாரிகள் மேற்படி சம்பவத்திற்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது பற்றி கலந்துரையாடவுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka