இருவர் அவசர சிகிச்சை பிரிவில் » Sri Lanka Muslim

இருவர் அவசர சிகிச்சை பிரிவில்

IMG_20200322_104901

Contributors
author image

Editorial Team

கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளதாக இனம் காணப்பட்டுள்ள இரண்டு நோயாளர்கள் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் தற்சமயம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை 77 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரண அருண நிகழ்சியில் பங்கேற்று தெரிவித்தார்.

பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை நேற்று முதல் கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை முழுமையாக கொரோனனா தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலையமாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதேபோல் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க மாலம்பே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை, டீ சொய்சா வைத்தியசாலை, காசல் வீதியில் உள்ள மகபேற்று வைத்தியசாலைகளையும் பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் கொத்தலாவல வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

அதேபோல் வொயிஸ் அமெரிக்கா நிறுவனமும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இராணுவத்தால் மாற்றப்பட்டு வருவதாகவும் சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka