தனிமைப்படுத்தல் நிலையமாக முன்னாள் பிரதமரின் இல்லம் .! » Sri Lanka Muslim

தனிமைப்படுத்தல் நிலையமாக முன்னாள் பிரதமரின் இல்லம் .!

IMG_20200324_111839

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Boomudeen

கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் நிலையமாக முன்னாள் பிரதமர் காலம்சென்ற இரட்னசிறி விக்கிரமநாயக்கவின் வீட்டை வழங்க முன்வந்துள்ளார் அவரின் புதல்வரான − முன்னாள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமரத்ன.

அத்துடன், தனது வீட்டையும் அப்பணிக்கே வழங்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவுக்கு சொந்தமான ஹொரனையில் உள்ள வீட்டை அரசாங்கத்திடம் அண்மையில் கையளித்தார் விதுர.

அதேபோல, இங்கிரியவிலுள்ள தன்னுடைய வீட்டையும் எவ்விதமான கட்டணங்களும் இன்றி அரசாங்கத்துக்கு வழங்கவுள்ளேன் என்றும் அறிவித்துள்ளார்.

.அதுமட்டுமன்றி, மக்களின் பணத்தை வீணாக்கும் இடமாக கருதப்படும் பாராளுமன்றத்தையும் தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Web Design by The Design Lanka