தமிழ், முஸ்லிம் , மலையக அரசியல் தலைவர்களே! உங்கள் கவனத்திற்கு » Sri Lanka Muslim

தமிழ், முஸ்லிம் , மலையக அரசியல் தலைவர்களே! உங்கள் கவனத்திற்கு

politics

Contributors
author image

Fauzer Mahroof

இலங்கையிலுள்ள தமிழ், முஸ்லிம் , மலையக அரசியல் தலைவர்களே! தமிழ்,முஸ்லிம், மலையக பாராளுமன்ற உறுப்பினர்களே!

தேர்தலுக்கு மட்டுமா மக்களிடம் வருவீர்கள்?
துன்பத்திற்குள்ளாகிய மக்கள் மத்தியில், உங்கள் ஒருவரையும் காணவில்லையே?

மருத்துவ பணியாளர்கள் போல், நீங்களும் மக்களின் துயர் துடைக்க களத்தில் அல்லவா இருந்திருக்க வேண்டும்?

மக்களின் பெயரால் அரசியல் செய்து, ஆனால் உங்களின் பல தலைமுறைக்கு சொத்தும் செல்வமும் சேர்த்திருக்கும் நீங்கள், மக்கள் அன்றாடம் காய்ச்சிகளாக துன்பப்படும் போது, எங்கே ஒழிந்திருக்கிறீர்கள்?

தேர்தல் காலத்தில் மட்டுமல்ல , அனர்த்த காலத்திலும் இவர்களை வெளியில் – மக்களிடம் வாருங்கள் என , மக்களே /சமூக சக்திகளே நிர்ப்பந்தியுங்கள்!

“இப்போது கூப்பிட்டும் வராரா பெரிய ஐயாமார்.”
இவர்களை கச்சையுடன் வர சொல்லவில்லை,கையுறையும் மாஸ்க்கும் அணிந்துதான் வர சொல்கிறோம். ஏழை , கைவிடப்பட்டுள்ள மனிதர்களுக்கு உதவ சொல்கிறோம்.

இதனை ஒரு மக்கள் கோரிக்கையாக மாற்றுவோம்!

இக்கருத்தில், உங்களுக்கு உடன்பாடு இருந்தால் பகிருங்கள்!

Web Design by The Design Lanka