தவறான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக நிர்வாகி விளக்கமறியலில் » Sri Lanka Muslim

தவறான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக நிர்வாகி விளக்கமறியலில்

arrest

Contributors
author image

Editorial Team

கோவிட் 19 வைரஸ் குறித்த தவறான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாக பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் தனது பேஸ்புக் கணக்கு மூலம் கோவிட் 19 வைரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேக நபரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

Web Design by The Design Lanka