நாட்டில் இன்று எந்தவொரு கொரோனா தொற்று நோயாளரும் இனங்காணப்படவில்லை » Sri Lanka Muslim

நாட்டில் இன்று எந்தவொரு கொரோனா தொற்று நோயாளரும் இனங்காணப்படவில்லை

IMG_20200325_200328

Contributors
author image

Editorial Team

நாட்டின் எந்தப் பகுதியிலும் இன்று எந்தவொரு கொரோனா தொற்று நோயாளரும் இனங்காணப்படவில்லை என்று அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் பரவலை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது. மக்கள் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றினால் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் வெற்றி பெறும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் இதுவரை 102 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 225 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

                                                                                                                                                                                                     அறிக்கை இலக்கம்: 84/2020
2020.03.25                                                                                                                                                                                     வெளியிடப்பட்ட நேரம்: 16.45

                                                                                                             ஊடக அறிக்கை

இன்றைய தினத்தில் (2020.03.25) பி.ப 4.30 மணியளவில் கொரோனா வைரசு தொற்று நோயினால் எந்தவொரு நோயாளரரும் பதிவாக இல்லை என்று சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய சேவை , மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராச்சி அவர்கள் கொவிட் 19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் உறுதி செய்தார்.
இதற்கமைய நேற்றைய தினமளவில் (2020.03.24) இலங்கையில் பதிவான கொரோனா தொற்று நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 102 ஆகும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாலக கலுவேவ
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்

Web Design by The Design Lanka