புத்தளத்தில் ஒருவருக்கு கொரோனா » Sri Lanka Muslim

புத்தளத்தில் ஒருவருக்கு கொரோனா

IMG_20200311_095846

Contributors
author image

Editorial Team

ரஸீன் ரஸ்மின்

புத்தளத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (28) உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, புத்தளம் தள வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

புத்தளம் நகரைச் சேர்ந்த துவான் எனற நபர், கடந்த 17ஆம் திகதி இந்தோனேசியாவிலிருந்து புத்தளததுக்கு வருகைதந்துள்ள நிலையிலேயே, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்படடுள்ளது.

குறித்த நபரை அவதானித்த சிலர் சுகாதார பிரிவினருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, அவர் நேற்று (27) புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக நேற்றைய தினம் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக புத்தள தள வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் சுமித் அத்தநாயக்க தெரிவிததுள்ளார்.

குறித்த நபர் குருநாகல் வைத்தியசாலையிலிருந்து கொழும்பு ஐ.டீ.எச்  வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Web Design by The Design Lanka