சுவிஸ் போதகரின் ஆராதனை; மூதூர் குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது » Sri Lanka Muslim

சுவிஸ் போதகரின் ஆராதனை; மூதூர் குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது

IMG_20200329_102832

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

தீஷான் அஹமட் (TM)

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சுவிஸ் மத போதகரின் ஆராதனையில் கலந்துகொண்டதாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த குடும்பமொன்று, நேற்றைய தினம் (28) தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆராதனையில் மேற்படி குடும்பத்தினர் கலந்துகொண்டுள்ளதாக மூதூர் சுகாதார பிரிவினருக்கும், மூதூர் பொலிஸாருக்கும் தகவல் கிடைத்ததையடுத்து, அக்குழுவினர், குறித்த வீட்டுக்குச் சென்று அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அவர்களை 14 நாள்களுக்கு வெளியில் செல்லக்கூடாதெனவும், அவர்களுக்கு வீட்டுக்கு முன்னால் அபாய விளம்பரமொன்று இடப்பட்டுள்ளதாகவும், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வை.ஜெஸ்மி தெரிவித்தார்.

எனினும், குறித்த குடும்பமானது தாங்கள் குறித்த ஆராதனையில் கலந்துகொள்ளவில்லையென விசாரணையில் தெரிவித்ததாகவும் எனினும், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவும், மூதூர் பொலிஸாரும் அக்குடும்பத்தை 14 நாள்களுக்கு கண்கானிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு மூதூர், தோப்பூர், சம்பூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவதானமாக இருக்குமாறும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வை.ஜெஸ்மி மேலும் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka