நியூயார்க் நகரத்தை முடக்குவது குறித்து அதிபர் டிரம்ப் ஆலோசனை? » Sri Lanka Muslim

நியூயார்க் நகரத்தை முடக்குவது குறித்து அதிபர் டிரம்ப் ஆலோசனை?

IMG_20200329_103751

Contributors
author image

BBC

நியூயார்க் நகரத்தை முழுமையாக தனிமைப்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

இந்த வைரஸ் தொற்றின் மையமாக நியூயார்க் இருப்பதால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அந்நகரத்தை தனிமைப்படுத்துவது குறித்து சிந்திப்பதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியிருந்தார்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துவிட்ட நிலையில், இதில் நியூயார்க்கில் மட்டும் 52,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

ஆனால், அதிபர் டிரம்பின் இந்த யோசனையை நியூயார்க் ஆளுநர் கடுமையாக விமர்சித்தார். இது ”விபரீதமானது”, ”அமெரிக்காவிற்கு எதிரானது”, ”போர் அறிவிப்பு போன்றது” என்று நியூயார்க் ஆளுநர் ஆன்ட்ரு தெரிவித்தார்.

நியூயார்க்கில் ஏற்கனவே மக்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், மக்கள் அதிகமாக பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் கூறியுள்ளார். எனவே அந்நகரை முழுமையாக முடக்குவதற்கு ஆளுநர் ஆண்ட்ரு எதிர்ப்பு தெரிவித்தார்.

“நியூயார்க்கிற்கு முழுமையாக தடை விதித்தால், சீனாவின் வுஹான் போல நாம் ஆகிவிடுவோம், இதனால் எந்த பலனும் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் எதிர்பார்க்காத அளவிற்கு பங்கு சந்தை வீழ்ச்சி அடையும், மீள முடியாத அளவிற்கு அமெரிக்க பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில்தான் நியூயார்க்கை முடக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வந்த அதிபர் டிரம்ப், தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

Web Design by The Design Lanka