பாராட்டி கௌரவிப்பு » Sri Lanka Muslim

பாராட்டி கௌரவிப்பு

PHOTO-2018-08-01-12-37-49

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இக்பால் அலி


தொலைக்காட்சி ஊடாக காண்பிக்கப்பட்டு நடத்தப்படும் ‘மாஸ்டர் பெல’ நிகழ்வில் இறுதிச் சுற்றுப் போட்டிற்காக இம்முறை தெரிவு செய்யப்பட்ட கண்டி பதியுதீன் முஹ்மூத் மகளிர் கல்லூரியின் இரு மாணவிகளுக்கு முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் அவர்களினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் அவர்களின் ஏற்பாட்டில் அவரது கண்டி மாவில்மட (1) இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் ஜி. எப். ஏ. சிஹானா றஹீம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இம்முறை பாடசாலை மட்டத்தில் நடைபெறும் ‘மாஸ்டர் பெல’ இறுதிச் சுற்றுப் போட்டிற்காக ஐந்து பேர் தெரிவு செய்யப்பட்டவர்களில் இதில் விசேடமாக மூன்று முஸ்லிம் மாணவிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் இறுதிச் சுற்றுப் போட்டி எதிர் வரும் 3-9-2018 வெள்ளிக்கிழமை சர்வதேச பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரனில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இருந்து இரு மாணவிகளும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இருந்து ஒரு மாணவியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

7500 பேர் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றுப் போட்டிக்காக ஐந்து பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மத்திய மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகளான ஷரிகா ஹாபிஸ், ஹாலா மரைக்கார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரு மாணவிகளுகளையும் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் கண்டி மாவில்மடவிலுள்ள இல்லத்தில் வைத்து விருதுகள் வழங்கி கௌரவித்தார்..

இதில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி மரியம் அமீர் என்ற மாணவியும் அநுராதபுரம் புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த சக்தி வீரவன்ச என்ற மாணவனும், ஸ்ரீமாவோ பண்டாரநாயக கல்லூரியைச் சேர்ந்து பினூரி வீரசிங்க என்ற மாணவியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Web Design by The Design Lanka