Covid - 19 வைரஸை உருவாக்கி பரப்பியது நீ தான்..?. » Sri Lanka Muslim

Covid – 19 வைரஸை உருவாக்கி பரப்பியது நீ தான்..?.

IMG_20200330_133808

Contributors
author image

Editorial Team

அவன் வைரஸ பரப்பினா என்னலே…..
நீ ஏம்லே ஆன்டி வைரஸ கண்டுபிடிக்கல…!
—————————————————————-
Covid – 19 வைரஸை உருவாக்கி பரப்பியது நீதான் என்று அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். எவனோ ஒருத்தன் எல்லாத்தையும் கொல்ல முடிவு பண்ணிட்டான் என்பது உறுதியாகி விட்டது.

அல்குர்ஆன் 22:73 வசனம் ‘ நீங்க அனைவரும் ஒன்று திரண்டாலும் ஒரு ” ஈ ” போன்ற உயிரைக் கூட உங்களால் படைக்க முடியாது” என்ற உண்மையை போட்டு உடைக்கிறது.இறைத்தூதர்கள் உள்ளிட்ட மனிதர்கள் எவருக்கும் உயிர்களை புதிதாக உருவாக்கும் ஆற்றல் கிடையாது.

வைரஸ்,அமீபா,பாக்டீரியா,பூஞ்சை போன்ற மனித கண்களுக்குப் புலப்படாத நுண்ணுயிர்களாக இருந்தாலும் கூட அவற்றை மனிதர்களால் ஒருபோதும் புதிதாக படைத்திட முடியாது.ஆனால் பூமியில் ஏற்கனவே படைக்கப்பட்டிருக்கும் இதுபோன்ற உயிரினங்களை வேறு வேறு வடிவத்திற்கு மனிதனால் மாற்ற முடியும்.

அதன் மூலம் அவனது கீழ்த்தரமான விருப்பங்களைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

கழுதை – குதிரை கலப்பில் உருவான கோவேறு கழுதை போல துவங்கிய கால்நடை கலப்பின உருவாக்கம் இப்போது எல்லை மீறி மனித மரபணுவை ஆடு மாடு பன்றி நாய் போன்றவற்றோடு இணைத்து கொடூரமான உருவங்களை கொண்ட கலப்பு இனங்களை (Inter species Chimera) உருவாக்கும் பைத்தியக்காரத்தனம் உயர்கல்வி ஆராய்ச்சி என்ற பெயரில் உலகில் பெருகி வருகிறது.

இதன் அடுத்தகட்டம் தான் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களில் கலப்பு இனங்களையும் வீரியரக ஒட்டுயிரிகளையும் ஆய்வகங்களில் வளர்த்தெடுத்து அவற்றை எதிரிநாடுகள் மீது பரப்பும் உயிரி போருக்கு (Bio-War) அமெரிக்கா சீனா ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தயாராகி விட்டன.

சரி இனி நாம் என்ன செய்வது…..?

நமது பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.இந்த ஆபத்தை வெல்வதற்கு அதைத் தவிர வேறு வழியே கிடையாது.

மேற்படிப்பு படிக்க வைப்பது நல்ல வேலை கிடைப்பதற்கும் நிறைய பணம் சம்பாதிக்கவும் மட்டும் தான் என்ற முந்தைய முட்டாள் தனத்தில் இனியும் சுயநலமாக இருந்தோம் என்றால் நாமும் நமது சந்ததிகளும் அடையாளம் இல்லாமல் அழிந்து போவோம் என்பதை விவரிக்க வேண்டிய தேவை இப்போது இல்லை.

தீய சக்திகளிடமிருந்து மனிதகுலத்தை – இந்த அண்டத்தை பாதுகாக்கும் வலிமையான ஆயுதம் அறிவு என்று இஸ்லாம் சொல்கிறது.அறிவுத் துறையில் இனியாவது இஸ்லாமிய கருத்திற்கு மரியாதை கொடுப்போம்.

கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் குறித்த நுட்பமான படிப்பு Microbiology / Bio-Chemistry / Plant Biology…..,இந்த நுண்ணுயிர்களை நாட்டின் தேவைக் கேற்ப மாற்றிக்கொள்ள மேற்படிப்பில் Bio -Technology.., கொரோனா போன்ற கொடிய வைரஸ் குடும்பங்களை எதிர்த்துப் போரிட Virology / Bacteriology / Molecular Biology / Genetics போன்றவற்றில் தொடர்ச்சியான ஆய்வுகள்….,

உயிரி தாக்குதல் உலகில் அதிகரித்து விட்டால் மக்களை காப்பாற்ற நமது கிராமங்களில் கிடைக்கும் மூலிகைகள்,மரங்கள்,வேர்கள் உள்ளிட்டவற்றை மருந்துகளாக கொண்ட பக்க விளைவுகள் உண்டாக்காத உயிரி மருத்துவ படிப்புகளான சித்த மருத்துவம் / ஆயுர்வேதம் / யுனானி போன்ற இந்திய மருத்துவ முறை படிப்புகளில் ஆய்வுகள் மேற்கொள்வது… ஆகிய அமைப்பில் இனி நமது பிள்ளைகளின் கல்வி முறை அமைய வேண்டும்.

நாம் என்ன ஆயுதம் தூக்க வேண்டும் என்பதை நமது எதிரி தான் தீர்மானிக்கிறான்.ஆனால் நாம் எத்தகைய அறிவும் ஆற்றலும் பெற்றிருக்க இருக்க வேண்டும் என்பதை நமது சித்தாந்தமும் நாம் வாழும் காலமும் தீர்மானிக்கிறது.

ஆக்கத்திற்கு அல்லாமல் அழிவிற்கு உயிரி ஆயுதங்களை உருவாக்குபவர்கள் மனிதகுல எதிரிகள் மட்டுமல்ல. இந்த அண்டத்தைப் படைத்து பராமரிக்கும் எல்லாம் வல்ல இறைவனோடு போர் புரியும் கொடும் பாவிகள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 பள்ளிவாசல்களை  பெருமைக்கு பிரம்மாண்டமாக கட்டுவதை காட்டிலும்….,ஓரிருவர் குடியிருக்க கோடிகளில் வீடு கட்டுவதைக் காட்டிலும்….மனித குலத்தை பாதுகாக்கும் உயிரி மருத்துவ ஆய்வகங்கள் (Biomedical Research Institutes) கட்டுவது தான் இறைவனுக்கு பிடித்த நிலையான அறமாகவும், இன்றைய சூழலில் அறிவார்ந்த உம்மத்தின் அடையாளமாகவும் இருக்கும்.

– CMN SALEEM

Web Design by The Design Lanka