முஸ்லிம் நபரின் ஜனாஸா தகனம்! » Sri Lanka Muslim

முஸ்லிம் நபரின் ஜனாஸா தகனம்!

tear

Contributors
author image

Editorial Team

கொவிட் 19 வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் உயிரிழந்த முஸ்லிம் நபரான சகோதரர் ஜூனூஸ் அவர்களின்  ஜனாஸா சற்றுமுன்னர் எரியூட்டப்பட்டதாக அறியமுடிகின்றது.

கொடிகாவத்தை பொது மயானத்தில் ஜனாஸா எரிக்கப்பட்டது என தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இவரின் ஜனாஸாவை பெறுவதற்காக குடும்பத்தினர் பல பிரயத்தனங்களை மேற்கொண்ட  போதும்  வைத்திய காரணங்கள் முன்வைக்கப்பட்டு மறுக்கப்பட்டது.

இவரின் ஜனாஸாவை இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் நல்லடக்கம் செய்வதற்கு பெரும் முயற்சிகளை பல தரப்பினர் மேற்கொண்டிருந்த போதும் அவை வெற்றியளிக்கவில்லை.

சர்வதேச நாடுகளில்  வைரஸினால் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அவர்களின் மார்க்க அடிப்படையில் நல்லடக்கம் செய்யப்பட்டு வரும் வேளையில், இலங்கையில் எரியூட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமையானது முஸ்லிம்  மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடைமுறை தொடர்பில் சமூக ஊடகம் வாயிலாக பலர் அதிருப்திகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

உலக நாடுகள் வைரஸ் பற்றிய ஆழ்ந்த கரிசனையை வெளிப்படுத்தி வரும் இத்தருணத்தில், இலங்கையிலும் இந்தியாவிலும் ஆட்கொல்லி வைரஸை மதங்களிலும் அரசியலிலும் உட்புகுத்தும் செயற்பாடுகள் மிகவும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது இனங்களுக்கிடையே மேலும் பாரியே பிளவினை மேலும் உருவாக்கும் செயலாக மாறியுள்ளது.

இலங்கையில் எல்லோருக்கும் பொதுவான ஒரு சட்டம் தான் இருக்க வேண்டும் என்ற இனவாத சித்தாந்தத்தின் அடிப்படையில் முஸ்லீம் நபரின் ஜனாஸா எதுவித விட்டுக்கொடுப்புமின்றி  தகனம் செய்யப்பட்டதாக சில குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka