33 இலங்கையர் உட்பட 960 தப்லீக் ஜமாஅத்தினரின் விசாக்கள் ரத்து » Sri Lanka Muslim

33 இலங்கையர் உட்பட 960 தப்லீக் ஜமாஅத்தினரின் விசாக்கள் ரத்து

IMG_20200403_180943

Contributors
author image

Editorial Team

33 இலங்கையர் உட்பட 960 தப்லீக் ஜமாஅத் அமைப்பினரின் விசாக்களை ரத்து செய்வதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடில்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாஅத்தினர் சட்டத்தை மீறி கூட்டம் கூடியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு இத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தோனேசியா, பங்களாதேஷ், மலேசியா போன்ற பல நாடுகள் நாடுகளைச் சேர்ந்த தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்களின் இந்தியாவுக்கான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் புதுடில்லி நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ள தப்லீக் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் மீது வழக்குகளையும் இந்திய போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

இவர்கள் கொவிட் 19 வைரஸ் பரவும் காலத்தில் கூட்டம் கூடியதாகவே இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனினும் சட்டப்படி தடைகள் ஏதும் விதிக்கப்படாத காலப்பகுதியிலேயே நாம் எமது வருடாந்த கூட்டத்தை நடத்தியதாகவும் அரசாங்கம் பாண்டிக்கு வந்தவுடன் உடனே வைரஸ் தொடர்பான பரிசோதனைகளுக்கு ஒத்ததாகும் தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் தங்களது வாதத்தையும் நியாயத்தையும் முன்வைத்துள்ளனர்.

Web Design by The Design Lanka