தமிழ் நாட்டில் திட்டமிட்டு சிதைக்கப்பட்டு வரும் இந்து - இஸ்லாமிய உறவு » Sri Lanka Muslim

தமிழ் நாட்டில் திட்டமிட்டு சிதைக்கப்பட்டு வரும் இந்து – இஸ்லாமிய உறவு

IMG_20200404_182031

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Arun mo

குடியுரிமை சீர்திருத்த சட்டம் ஏற்படுத்த வேண்டிய பாதிப்புகளை எல்லாம் கொரோனா ஏற்படுத்திவிட்டது. அந்த சட்டத்தின் மூலம் சாதிக்க நினைத்ததை கொரோனா பாதுகாப்பு என்கிற பெயரில் சாதித்துக்கொண்டிருகிறார்கள்.

இந்தியாவிலேயே இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு முன்னோடி மாநிலம் தமிழ்நாடுதான். தமிழ்நாட்டிலேயே மக்களின் அச்சத்தை மூலதனமாக கொண்டு முஸ்லீம்கள் மீது போதுமான எரிச்சலை உண்டுபண்ணிவிட்டார்கள்.

இப்போது இஸ்லாமியர்களுக்கு எதிரான அலை இங்கே உருவாகிக்கொண்டிருக்கிறது.

அவர்கள் செய்யும் சிறு தவறும் கூட மிகைப்படுத்தி ஊடகங்களில் பகிரங்கமாக வெளியிடப்படுகிறது. மக்களின் ஒற்றுமை இருக்கும் வரைதான் ஒருவர் இன்னொருவரின் வலிக்காக போராட முடியும்.

இங்கே மக்களை பிளவுப்படுத்திவிட்டால் நாளை இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் பெரும்பாண்மை இந்து சமூகம் போராட முன்வராது. சட்டமோ, நோயோ, இயற்கை சீற்றமோ அதெப்படி எல்லாமும் சிறுபான்மையினரை இவ்வளவு விரைவாக தாக்குகிறது. அவர்கள் இலக்கை நிர்னயித்துபிட்டார்கள்.

இனி இஸ்லாமியர்கள் என்ன செய்தாலும் தவறுதான் என்கிற மனநிலையை மக்களிடையே உருவாக்கிவிடுவார்கள். கொரோனா அவர்களின் மதச்சார்புக்கு ஒரு கூடுதல் போனஸ் அவ்வளவுதான்.

Image – the express Tribune blog

Web Design by The Design Lanka