அட்டுளுகமையில் நடப்பதென்ன » Sri Lanka Muslim

அட்டுளுகமையில் நடப்பதென்ன

IMG_20200404_232548

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohammed ajaaz – Attorney at law

3650 குடும்பங்களைக் கொண்ட அட்டுளுகமவுக்கு நிவாரண உதவிகள் அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படும் செய்திகள் முற்றிலும் உண்மை அல்ல.

ஒரேயொரு தடவை ஏதோவொரு நிறுவனத்தால் 360 குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள சுமார் 3000 குடும்பங்களுக்கு இதுவரை எந்த நிவாரணங்களும் வழங்கப்படவில்லை என களுத்துறை ஜமிய்யதுல் உலமா சபையின் தலைவர் மெளலவி அப்துர் ரஹ்மான் பஹ்ஜி அவர்கள் என்னிடம் தொலைபேசியில் குறிப்பிட்டார்.

அங்குள்ள கர்ப்பிணித் தாய்மார்களை அவர்களுக்கு மிக அண்மையில் உள்ள பாணந்துறை மருத்துவமனையில் ஏற்றுக்கொள்ள மறுத்து மிகவும் தூரத்தில் உள்ள மாலபே மருத்துவமனைக்குச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கப் படுகிறார்களாம்.

இவை குறித்த தகவல்களை ACJU மற்றும் MCSL க்கும் அறிவித்திருப்பதாக அட்டுளுகமையைச் சேர்ந்த அஸ்லம் ஹாஜியார் என்னிடம் உறுதிப் படுத்தியுள்ளார். அதன் பிரதியொன்று எனக்கும் கிடைத்துள்ளது.

லொக் டவுன் செய்யப்படும் எல்லாக் கிராமங்களுக்கும் போதிய உணவு, மருத்துவத் தேவைகளை வழங்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

Image: Mafooz (கொழும்பின் ஒரு பகுதியில் கொடுக்கப்பட்ட நிவாரண பொதியில் புகைப்படம் இதுவாகும்.)

Web Design by The Design Lanka