மருதமுனையில் மரணித்த பெண்ணின் குழந்தைக்காக இரு கரம் ஏந்துவோம் » Sri Lanka Muslim

மருதமுனையில் மரணித்த பெண்ணின் குழந்தைக்காக இரு கரம் ஏந்துவோம்

IMG_20200404_234913

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

A.H.M.Boomudeen

மருதமுனையில் நேற்று முன்தினம் மரணமடைந்த பெண்ணினதும் − நண்பர் அஸ்வானின் மூத்த புதல்வியுமான ஆயிஷா அம்ரின் (வயது 8 ) சுகவீனமுற்ற நிலையில் கல்முனை − அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்திய அறிக்கையின் படி , ஆயிஷா அமரின் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது − இக் குழந்தையை பீடித்துள்ள டெங்கு காய்ச்சல் அவ்வப்போது கூடுவதும் , குறைவதுமாக உள்ளது ..

தாயின் இழப்பு ஒரு புறம் குழந்தையை வேதனைக்குட்படுத்தி இருக்கும் இச்சூழ் நிலையில் − அக்குழந்தைக்கு இப்போதுள்ள அவசரத் தேவை மன நிம்மதி மட்டுமே..

இந்த மன நிம்மதி அக்குழந்தைக்கு கிடைக்கவும் − அவரை பீடித்துள்ள டெங்கு காய்ச்சலில் இருந்து கூடிய விரைவில் மீண்டு வரவுமுள்ள ஒரே வழி எமது பிரார்த்தனைகள் மூலமான அல்லாஹ்வின் நாட்டமே.

எனவே , இத் தகவலை வாசிக்கின்ற ஒவ்வொருவரும் தத்தமது தொழுகை மற்றும் வணக்க வழிபாடுகளில் இக் குழந்தையின் சுகத்திற்காகவும் , மரணமடைந்த இக் குழந்தையின் தாய்க்கு சுவனம் கிட்டவும் − மரணமடைந்த பெண்ணின் கணவரான அஸ்வானின் மன நிம்மதிக்காகவும் இரு கரம் ஏந்தி இறைவனிடம் பிரார்த்திப்போம்..

நேற்று முன்தினம் மரணமடைந்த − குறித்த குழந்தையின் தாயும் டெங்கு காய்ச்சலினாலேயே மரணமடைந்திருந்தார் என்பது வைத்தியர்களினால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது..

Web Design by The Design Lanka