முஸ்லிம் ஜனாஸாக்களை எரிக்கக் கூடாது - பிரதமருடனான கூட்டத்தில் அதாவுல்லாஹ் வாக்குவாதம் » Sri Lanka Muslim

முஸ்லிம் ஜனாஸாக்களை எரிக்கக் கூடாது – பிரதமருடனான கூட்டத்தில் அதாவுல்லாஹ் வாக்குவாதம்

athaullah6

Contributors
author image

Editorial Team


கொரோனா வைரஸினால் உயிரிழக்கும் முஸ்லிம் நபர்களின் ஜனாஸாக்களை எரிக்கக்கூடாது என்று தேசிய காங்கிரசின் தலைவர் அதாவுல்லாஹ், சுகாதார அமைச்சருடன் வாக்குவாதப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (புதன்) நடைபெற்றுள்ளது.

ஆளுங்கட்சி தலைவர்களுடனான சந்திப்பின்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆளுங்கட்சி கட்சித் தலைவர்களுடனான இன்றைய கூட்டத்தில் பங்குகொண்ட அதாவுல்லாஹ், “முஸ்லீம் நபர்களின் ஜனாஸாக்களை எதிர்ப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும்” என்ற தொனியில் பேசியுள்ளார்.

இதனைச் செவிமடுத்த சுகாதார அமைச்சர், “இந்த நாட்டில் கொரோனா வைரஸினால் மரணிக்கும் அனைவருக்கும் ஒரு சட்டம் தான். அதில் பிரிவினை கிடையாது” என்றார்.

சுகாதார அமைச்சரின் கருத்தை சினத்துடன் எதிர்கொண்ட அதாவுல்லா, “இவ்வாறு சட்டம் அமுல்படுத்தப்படுமாக இருந்தால், இனிமேல் முஸ்லிம்களுக்கு வைரஸ் ஏற்பட்டால் கூட அதனைச் சொல்லுவதற்கு அவர்கள் தயங்குவார்கள். இது பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டார்.

இந்த சம்பாஷணையை கேட்டுக்கொண்டிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச, அவ்வாறு நடைபெறுமாக இருந்தால் அதற்கான பொறுப்புகளை அவர்களே ஏற்க வேண்டிவரும்” என்ற தொனியில் அதாவுல்லாவினை நோக்கி குறிப்பிட்டார்.

இன்றைய கூட்டத்தில் அதாவுல்லாவின் குரல் முஸ்லிம்களுக்காக பலமாக ஒலித்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka