தேர்தலும் கொரோனாவும்; மக்களே அவதானம்! - Sri Lanka Muslim
Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Ayyub Azmin

உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கொவிட்-19 வைரஸ் தொற்றானது இலங்கை அரசாங்கத்தின் கவயீனத்தினாலேயே நாட்டுக்குள் பிரவேசித்தது என்பதைப் பலரும் அறிவர். கொவிட்-19 வைரஸ் தொற்றை பரவாமல் தடுக்கும் செயற்பாடுகள் விடயத்திலும் இலங்கையில் முடியுமானவரைக்கும் இனவாதப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன, இது விடயத்திலும் இலங்கை அரசாங்கம் எவ்விதமான காத்திரமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

கொவிட்-19 வைரஸ் பரவைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளிலும் இலங்கை அரசாங்கம் ஜனாநாயக முறைமைகளைக் கடைப்பிடிக்காமல் வேறு வழிகளைக் கடைப்பிடிப்பதிலேயே ஆர்வம் காட்டியது. ஏப்ரல் 30ம் திகதியோடு முடிவுக்கு வருகின்ற வரவுசெலவுத்திட்டத்தின் குறைநிரப்பு ஏற்பாடுகள் விடயத்தினை சமாளிப்பதற்காக அவசர அவசரமாக பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதில் இலங்கை ஜனாதிபதி முனைப்புக்காட்டுவதை அறியக்கூடியதாக இருக்கின்றது.

அதன் ஒரு அம்சமாகவே அவரது அமைச்சரவையின் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி 2020 ஏப்ரல் 19ம் திகதிக்குள் கொவிட்-19 வைரஸ் பரவல் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வரும் எனத் தெரிவித்துள்ளார். அதேபோன்று சுகாதாரசேவைகள் பணிப்பாளர் அவர்களும் கடந்த 24 மணிநேரத்தில் எவ்விதமான கொவிட்-19 நோய்த் தொற்றாளர்களும் அடையாளம் காணப்படவில்லை என்றும், ஏற்கெனவே சிகிச்சைபெறுகின்ற நோயாளிகள் விரைவாகக் குணமடைவதாகவும் தெரிவித்திருக்கின்றார். ஆனால் இதே சுகாதார அமைச்சரும் பணிப்பாளர் அவர்களும் கடந்த வாரம் வேறுவிதமான தகவல்களையும் தரவுகளையும் முன்வைத்திருந்தார்கள்

இப்போது கொவிட்-19 நோய்த்தொற்று மாயமாக மறைவதற்கான வாய்ப்புக்களே அதிகமாக நிலவுகின்றன. ஒன்றில் நோயாளிகளைப் பரிசோதிக்காமலேயே நோய்த்தொற்றாளிகள் இல்லை என்ற ஒரு முடிவுக்கு வரமுடியும்; அல்லது பரிசோதனை முறைமைகளில் ஏதேனும் ஒரு முறைமையைப் புகுத்தி நோய்த்தொற்று இல்லை என்ற ஒரு முடிவை அறிவிக்கவும் முடியும். எது எவ்வாறாயினும் தேர்தலை நடாத்திவிடவேண்டும் என்று முடிவு செய்தபின்னர் எதுவும் இலங்கையில் சாத்தியமே. ஏனெனில் இப்போதிருக்கும் அரசியலின் டிசைன் அப்படியானது.

மக்களே அவதானம் அவசியம்……

Web Design by Srilanka Muslims Web Team