ஈழம் தொடர்பான உள்ளக்கத்தை நீக்குமாறு கார்டியன் இணையத்தளத்திடம் இலங்கை கோரிக்கை » Sri Lanka Muslim

ஈழம் தொடர்பான உள்ளக்கத்தை நீக்குமாறு கார்டியன் இணையத்தளத்திடம் இலங்கை கோரிக்கை

Contributors
author image

Editorial Team

கடந்த 15 ஆம் திகதி ஐக்கிய இராஜியத்தில் இயங்கும் த காடியன் இணையத்தளம் “Travel quiz: do you know your islands, Man Friday?” என்ற கேள்வி பதில் பக்கத்தில் தெரிவிக்கப்பட்ட பதில் ஒன்று தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

அந்த இணைய பத்திரிகையின் இரண்டாவது பக்கத்தில் ஈழம் என்று அழைக்கப்படும் தீவின் பெயர் என்ன? கேட்கப்பட்டிருந்தது.

அந்த கேள்விக்கான சரியான பதில்களில் ஒன்றாக ´இலங்கை´ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு ஒருவர் இலங்கையை விடையாக தெரிவித்திருந்த நிலையில் அதுவே சரியான பதிலாகவும் அமைந்திருந்தது. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் (L.T.T.E) எனவும் அதில் விபரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் கார்டியன் இணையத்தள ஆசிரியருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, ஈழம் என்ற உள்ளடக்கத்தை அகற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Web Design by The Design Lanka