அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உயர் விருதைப் பெற்ற இலங்கைப் பெண் » Sri Lanka Muslim

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உயர் விருதைப் பெற்ற இலங்கைப் பெண்

IMG_20200517_091004

Contributors
author image

Editorial Team

தர்சிகா விக்னேஸ்வரன் என்ற இலங்கைப் பெண் அமெரிக்காவில் கிளெம்சோன் பல்கலைக்கழகத்தில் 2019 வருடாந்த மேல் எழுந்து வரும் தலைவர்கள் விருதை பெற்றுள்ளார்.

கிழக்கிலங்கையில் திருகோணமலை நகரை சேர்ந்த தர்சிகா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதல் வகுப்பில் 2018 இல் சித்தி பெற்றவர்.

உள்நாட்டு யுத்த நிலைமையால் பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்வதற்கு முன்னர் அவர் தொடர்ச்சியாக நிச்சயமற்ற நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிட்டது. ஆயினும் யாழ் , பல்கலை கழகத்தில் அவர் பட்டம் பெற்றபோது அவரின் அறிவுக்கூர்மை வெளிச்சத்திற்கு வந்தது.

வட இலங்கையில் பொறியியல் பீடத்திற்கு சென்றிருந்த போது தர்சிகாவின் திறமையை சவுத் கரோலினாவிலுள்ள கிளெம்சோன் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் அவதானித்துள்ளார். கல்வியில் திறமைசாலியாக விளங்கிய தர்சிகா ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.அவர் அமெரிக்காவில் உயர் கல்வியை தொடருவதற்கான ஏற்பாடுகளை இலங்கையை சேர்ந்த பேராசிரியர் நடராஜா ரவிச்சந்திரன் மேற்கொண்டிருந்தார்.

கிளென் திணைக்களத்தில் விஞ்ஞான முதுமாணி பட்டத்தை பெற்றிருக்கும் தர்சிகா விக்னேஸ்வரன் புவித்தொழில்நுட்ப பொறியியல் கல்வியை பூர்த்தி செய்துள்ளார். பேராசிரியராக வரும் நம்பிக்கையுடன் அவர் கலாநிதி பட்ட கல்வியை தொடரவுள்ளார். Tk

 

Web Design by The Design Lanka