தவத்தின் தேர்தல் வெற்றி உறுதியானது! » Sri Lanka Muslim

தவத்தின் தேர்தல் வெற்றி உறுதியானது!

IMG_20200518_125849

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ. எல். தவத்தின் பொதுத்தேர்தல் வெற்றியானது உறுதியாகி வருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

தற்போது இவரினால் முன்னெடுக்கப்படும் ஜனாஸாக்கள் எரிப்பதற்கு எதிரான கையெழுத்து வேட்டை, இவருக்கு சமூகத்தில் முன்னுரிமை வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களான ஹரீஸ், பைசல் காசிம், மன்சூர் மற்றும் நசீர் ஆகியோர்களை விட, தவம் கையெழுத்து வேட்டை மூலம் பிரபலமடைந்து வருவதை அனைவராலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

முஸ்லிம் மரபுகள் மற்றும் கலாசார மையம் எனும் அமைப்பை கையெழுத்து வேட்டைக்காக சில நாட்களுக்கு முன்னர் உருவாக்கி அதன் மூலம் தனது அரசியல் வெற்றியை நோக்கி நகர்த்தி வருவது அவருக்குள்ள திறமையின் வெளிப்பாடாகவே பலராலும் பார்க்கப்படுகிறது.

மு. க.வின் ஏனைய வேட்பாளர்களும் கட்சித் தலைமையும் இப்பணியில் உத்தியோக பூர்வமாக ஈடுபடாமல் இருக்க, தவம் எனும் தனி மனிதன் இப்பயணத்தை அம்பாறை மாவட்டம் முழுவதும் ஸ்திரப்படுத்தி வருகின்றார்.

இக் கையெழுத்து படிவத்தில் பெயர்,விபரங்களோடு தொலைபேசி இலக்கங்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இதனை தேர்தல் நெருங்கும் காலத்தில் தனக்குரிய பிரச்சார உத்தியாகவும் வாட்ஸ்அப் குடும்பமாகவும் பயன்படுத்தி தனது உரைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கான ஒரு சாதனமாகவும் அமைக்கப்படவுள்ளது.

ஒரு லட்சம் கையெழுத்து எனும் கோஷமானது தவத்திற்கு சுமார் 50 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுத் தரும் என்று தவத்தின் ஆதரவாளர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதனை மாத்திரம் தவம் தனது வெற்றிப் இயக்கமாக நம்பி இருக்கவில்லை. மாறாக முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான அதாவுல்லாவை   தினமும் சண்டைக்கு இழுத்து வருகின்றார்.

ஒருவகையில் அதாவுல்லா இவரிற்கு எதிராக  பதிவுகளையும் கருத்துக்களையும் வெளியிடுவார் என்றால் அதனைக் கொண்டும் அனுதாப வாக்குகளாக சுமார் பத்தாயிரம் வாக்குகளை  அக்கரைப்பற்று தவிர்ந்த பிரதேசங்களில் மு.கா. போராளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் தவத்தின் ஆதரவாளர்களுக்கு உண்டு.

ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால் எப்படியோ தவம் கையெழுத்து வேட்டையை  தனது தேர்தல் வெற்றிக்கான தீபமாக நம்பிக்கை கொண்டுள்ளார்.

ஏதோ ஒரு வகையில் இவரின் இச்செயற்பாடு அம்பாறை மாவட்டத்தின் ஏனைய மு.கா வேட்பாளர்களை விட அதிக வாக்குகளை அல்லது பிரச்சாரத்தை மற்றும் பிரபல்யத்தையும் மு.கா வாக்காளர்களிடம் பெற்றுக்கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பானது  மற்றுமொரு ஒருவகையில் ஏனைய மு.கா. வேட்பாளர்களுக்கான தோல்வியை அல்லது வாக்குகளின் சரிவை பறைசாற்றி நிற்கின்றது.

தவத்தின் இந்த வெற்றி நிச்சயப்படுத்தப் படுமாயின் அவருக்கு கட்சியின் தவிசாளர் பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது அல்ல என்பதுதான் இதன் யதார்த்தம்.

Web Design by The Design Lanka