இலங்கை ஜனாதிபதியின் நிர்வாகம் ஆபத்தான வெறுப்பை தூண்டுவதற்கு பதில் நேர்மையான நல்லிணக்கத்திற்கான பாதையை உருவாக்கவேண்டும் » Sri Lanka Muslim

இலங்கை ஜனாதிபதியின் நிர்வாகம் ஆபத்தான வெறுப்பை தூண்டுவதற்கு பதில் நேர்மையான நல்லிணக்கத்திற்கான பாதையை உருவாக்கவேண்டும்

IMG_20200519_131058

Contributors
author image

Editorial Team

இலங்கையின் நீண்ட கால ஈவிரக்கமற்ற யுத்தம் முடிவிற்கு வந்து பதினொரு வருடங்களாகியுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் உண்மை நீதி பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நோக்கி வாக்குறுதி அளிக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட்டுள்ளது மறுத்துள்ளது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
மாறாக சமீப வருடங்களில் முஸ்லீம் சிறுபான்மையினத்தவர்களிற்கு எதிரான பாரபட்சமும் குரோத பேச்சும் அதிகரிப்பதை காணக்கூடியதாகவுள்ளது அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தற்போது கொரோனா வைரசினை பயன்படுத்தி மதரீதியிலான பதட்டத்தை அதிகரிக்க முயல்வதுடன் மத சுதந்திரத்தை மீறுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக ஊடகங்களில் முஸ்லீம் வர்த்தக நடவடிக்கைகளை பகிஸ்கரிக்குமாறு வேண்டுகோள்கள் விடுக்கப்படுகின்றன என தெரிவித்துள்ள அவர் முஸ்லீம்கள் கொரோனா வைரசினை பரப்புகின்றனர் என்ற திட்டமிட்ட தகவல்கள் பரப்ப்பபடுகின்றன அதிகாரிகள் இதனை நிராகரிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வைரஸ் முஸ்லீம்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகின்றது என சிரேஸ்ட அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ளதை தொடர்ந்து முஸ்லீம்களும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும்,சிவில் சமூக அமைப்பை சேர்ந்தவர்களும் தங்கள் கரிசனைகளை வெளியிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார்கள் என மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 காரணாக உயிரிழந்த அனைவரினதும் உடல்களை தகனம் செய்யவேண்டும் என அரசாங்கம் மார்ச் மாதம் அரசாங்கம் அறிவுறுத்தல்களை வெளியிட்டது இது முஸ்லீம்களின் நம்பிக்கைக்கு முரணானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கங்கள் இதனை செய்யவேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்யவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் இது மத உரிமையை மீறும் செயல் என ஐநாவின் விசேட அறிக்கையாளர் கண்டனம் வெளியிட்டுள்ளார் எனவும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக முகநூலில் கருத்து வெளியிட்ட அரசாங்க உத்தியோகத்தரான ராம்சி ராசீக்கினை ஏப்பிரல் அதிகாரிகள் கைதுசெய்தனர்.அவர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு எதிரான தடைக்கு எதிராக பல மனுக்கள் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன , இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு இதற்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது எனவும் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழிவகைகள் குறிந்து பகிரங்க கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன இதில் பொதுமக்கள் மீண்டும் குரோத உணர்வு தோன்றுவதை தடுக்கவேண்டியது குறித்து தெரிவித்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அரசாங்கம் கண்மூடித்தனமான கொள்கைகளை பின்பற்றுகின்றது,கண்மூடித்தனமான பதில்களில் ஈடுபட்டுள்ளது மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் பாதுகாப்பு செயலாளராக விளங்கிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மீது யுத்த குற்றச்சாட்டுகள் உள்ளன என தெரிவித்துள்ள மீனாக்சி கங்குலி அவர் அச்சத்துடன் சிறுபான்மையினத்தவர்களால் பார்க்கப்படுகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

அவரது நிர்வாகம் ஆபத்தான வெறுப்பை தூண்ஈடுவதற்கு பதில் நேர்மையான நல்லிணக்கத்திற்கான பாதையை உருவாக்கவேண்டும் என மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka