ஆயிரத்தை கடந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை » Sri Lanka Muslim

ஆயிரத்தை கடந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை

IMG_20200425_115439

Contributors
author image

Editorial Team

இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்றைய தினம் புதிதாக 28 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனோ நோயாளிகளின் எண்ணிக்கை 1020 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த அனைவரும் ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த கடற்படையினர் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்

இதுவரை 569 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 442 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Web Design by The Design Lanka