கொரானா தடுப்பூசி குழுவிற்கு சம்பளமே வாங்காமல் பணியாற்றும் அமெரிக்காவின் முஸ்லீம் விஞ்ஞானி! » Sri Lanka Muslim

கொரானா தடுப்பூசி குழுவிற்கு சம்பளமே வாங்காமல் பணியாற்றும் அமெரிக்காவின் முஸ்லீம் விஞ்ஞானி!

IMG_20200521_170440

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கொரானா தடுப்பூசி குழுவிற்கு சம்பளமே வாங்காமல் பணியாற்றும் அமெரிக்காவின் முஸ்லீம் விஞ்ஞானி!
——————————————-
“Operation Warp Speed” எனப்படும் கொரானாவிற்கு தடுப்பூசி செயல்படுத்தும் அமைப்பிற்கு தலைவராக Dr. மான்செப் முஹம்மது சலூயி என்ற முஸ்லிமை தலைமை விஞ்ஞானியாக டானல்டு டிரம்ப் நியமித்துள்ளார்.

நோயெதிர்ப்பியல் (Immunology) கடந்த 10 ஆண்டுகளில் 14 புதிய தடுப்பூசிகளை உருவாக்குவதில் முஹம்மது சலூயி பெரும் பங்கு வகித்துள்ளார்.

“அமெரிக்காவின் வரலாறில், ‘அணுகுண்டு’ தயாரித்த திட்டத்திற்குப் பிறகு இது தான் மிகப்பெரிய ஒருங்கிணைந்த அறிவியல், தொழில்துறை மற்றும் தளவாட திட்டம்.
தடுப்பூசிகளை உருவாக்குவது மற்றும் உற்பத்தியில், உலகின் மிகவும் மரியாதைக்குரிய மனிதர்களில் ஒருவர் முஹம்மது சலூயி”, என்று டிரம்ப் கூறியுள்ளார்.

“என் நாட்டையும், உலகையும் பாதுகாக்கும் இந்த பொறுப்பானது, எனக்கு கிடைத்த மிகப் பெரும் பாக்கியம்” என்று கூறியுள்ளார் சலூயி.

கொரானா சமயத்திலும் லஞ்சத்தை எதிர்பார்க்கும் மக்களிடையே, பல கோடி ருபாய் தருவதற்கு அரசுகள் முன்வந்தாலும் வேண்டாம் என்று சொல்லி, 2020 இறுதிக்குள் தடுப்பூசி கொண்டு வர முயற்சிப்போம் என்று சொல்லும் முஹம்மது சலூயியை அல்லாஹ் பொருந்திக்கொண்டு, வெற்றியைக் கொடுப்பானாக.

இவருடைய கல்வித் தகுதிகள்:

Doctorate in molecular biology and immunology from the Université Libre de Bruxelles, Belgium

Post-doctoral studies at Harvard Medical School as well as Tufts University School of Medicine, Boston

GlaxoSmithKline (GSK)’s vaccines department and worked for 30 years

Author of more than 100 Scientific papers on immunology.

In a world first, he won European approval for a malaria vaccine in 2015

Ref:https://www.siasat.com/trump-selects-muslim-scientist-lead-covid-19-vaccine-plan-1891174/

https://foxsanantonio.com/features/coronavirus/trump-unveils-operation-warp-speed

Web Design by The Design Lanka