தற்கொலை செய்ய முயன்ற பெண்ணை காப்பாற்றி விட்டு தன் இன்னுயிர் நீத்த றிஸ்வான்! » Sri Lanka Muslim

தற்கொலை செய்ய முயன்ற பெண்ணை காப்பாற்றி விட்டு தன் இன்னுயிர் நீத்த றிஸ்வான்!

IMG_20200522_042423

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஒருவருக்காக, தன்னுயிரையே அர்ப்பணிக்க முன் வருவதுதான், தியாகத்தில் உச்சமானது!
—————-
தற்கொலை செய்ய முயன்ற பெண்ணை காப்பாற்றி விட்டு தன் இன்னுயிர் நீத்த றிஸ்வான்!

மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் தற்கொலை செய்துகொள்ள குதித்த யுவதியை மீட்க நீர்தேக்கத்தில் குதித்து கைப்பற்றிய இரண்டு பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கி காணாமற் போன நிலையில் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று காலை 10 மணியளவில் தற்கொலை செய்து கொள்ள மேல்கொத்மலை ஆற்றில் குதித்தை 22 வயதுடைய தமிழ் யுவதியை காப்பாற்ற நீர்தேக்கத்தில் குதித்த லிந்துலை ரந்தெனிகல கொலனியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 28 வயதுடைய ஹமீட் ரிஸ்வான் என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்

தற்கொலை செய்ய நீர்த்தேக்கத்தில் குதித்த பெண்ணை தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ருவான் பெர்னாந்து உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் விரைந்து செயற்பட்டு காபாற்றி லிந்துலை வைத்தியலையில் அனுமதித்ததுடன் பெண்ணை காப்பாற்ற நீரில் குதித்த மேற்படி இளைஞரை தேடி மீட்கும் பணியில் தொடர்ந்து பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஈடுட்பட்டு வந்தனர்

இந் நிலையில் சுமார் 07 மணித்தியாலங்களின் பின்னர் இளைஞன் நீர்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாணை தொடர்வதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

Web Design by The Design Lanka