குடும்பத்தகராறு; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி » Sri Lanka Muslim

குடும்பத்தகராறு; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

shoot

Contributors
author image

Editorial Team

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  தெனகல்லந்த- மாராவ பகுதியில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (31) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் 50 வயதுடைய நபரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக, மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.  (Tm)

Web Design by The Design Lanka