அலுத்கம சம்பவம் - மூன்று பொலிசார் கடமையில் இருந்து இடைநிறுத்தம் » Sri Lanka Muslim

அலுத்கம சம்பவம் – மூன்று பொலிசார் கடமையில் இருந்து இடைநிறுத்தம்

Police-general-2

Contributors
author image

Editorial Team

அளுத்கம பிரதேசத்தில் 15 வயதுடைய முஸ்லீம் சிறுவன் மீதான தாக்குதல் தொடர்பில் 3 போலீசார் தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தங்களது கடமைகளை உரிய முறையில் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில் இம்மூவரும் இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

அண்மையில்  முஸ்லிம் சிறுவன் மீது போலீசார் கொடூர தாக்குதல் மேற்கொண்டமை அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவம் தொடர்பில் அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலர் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில் தற்போது 3 போலீசார் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka