தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று » Sri Lanka Muslim

தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று

election comm

Contributors
author image

Editorial Team

2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று இடம்பெறவுள்ளது.

காலி மாவட்டத்தில் அம்பலாங்கொடை பிரதேச செயலகப்பிரிவில் தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று (07) இந்த ஒத்திகை வாக்களிப்பு நடைபெறுகிறது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர நாயகத்தால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக புதிய வழிகாட்டலுக்கு அமைவாக வாக்களிப்பு நிலைமை தொடர்பில் தெளிவை பெற்றுக் கொள்வதே இதன் நோக்கமாகும்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரட்நாயக்க,  புதிய வழி முறையில் ஒரு வாக்காளர் ஒருவருக்கு வாக்களிப்பதற்கான காலத்தை மதிப்பீடு செய்வது தொடர்பில் தெளிவை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கம் என்று தெரிவித்தார்.

Web Design by The Design Lanka