ஜனாஸா எரிப்பு வழக்கு ஒத்திவைப்பு » Sri Lanka Muslim

ஜனாஸா எரிப்பு வழக்கு ஒத்திவைப்பு

IMG_20200609_100433

Contributors
author image

Editorial Team

Covid 19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது உடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலி ஸாஹிர் மௌலானா அவர்களால் உயர் நீதி மன்றில் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு நேற்று (08) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முறைப்பாட்டாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா சார்பில் கடந்த மே மாதம் 15 ஆம் திகதி சர்வதேச விதிமுறைகளை தாண்டி கொவிட் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிற்கு மனுதாரர் சார்பில் சட்டத்தரணிகளாக ரவூப் ஹக்கீம், நிசாம் காரியப்பர், பாயிஸ் உட்பட பல சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஆஜர் ஆனார்கள்.

தபால் சேவை பாதிப்பு காரணமாக பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டவர்களுக்கான அழைப்பு கடிதங்கள் அனுப்பவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 13 ஆம் திகதி மீண்டும் விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka