சஹ்ரானுக்கும் எமது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை » Sri Lanka Muslim

சஹ்ரானுக்கும் எமது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை

hakeem

Contributors
author image

Editorial Team

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் ஹசீம் குழுவுடன் தமது அரசியல் கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டி, பிலிமதலாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் இவ்வாறு தங்களது கட்சியின் மேல் குற்றம் சுமத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு குழு தங்களுடன் இருப்பதை யாரும் அறிந்திருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka