சென்னையில் மாயமான 277 கொரோனா தொற்றாளர்கள் » Sri Lanka Muslim

சென்னையில் மாயமான 277 கொரோனா தொற்றாளர்கள்

IMG_20200523_163514

Contributors
author image

Editorial Team

சென்னையில் தவறான முகவரியைக் கொடுத்துவிட்டு 277 கொரோனா தொற்றாளர்கள் மாயமாகி உள்ளனர். இதனால் மற்றவர்களுக்குத் தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்துள்ளனர்.

இதையடுத்து மருத்துவமனைகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், தனிமைப்படுத்தும் மையங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 23ஆம் திகதி முதல் கடந்த 11ஆம் திகதி வரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 277 பேர் திடீரென மாயமாகி உள்ளனர்.

இதில் கடந்த மாதம் 23 முதல் 30ஆம் திகதி வரை 82 பேரும், 31ஆம் திகதி முதல் கடந்த 6ஆம் திகதி வரை 112 பேரும், 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை 83 பேரும் மாயமாகி இருக்கின்றனர்.

மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் முகாம்களில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் வீட்டு முகவரி, அலைபேசி எண் போன்ற தகவலைத் தவறாகக் கொடுத்து தப்பியிருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பகுதிவாரியாக அந்தந்த காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka