கைத்தறி, பதிக் புடைவை இறக்குமதியை நிறுத்த தீர்மானம் » Sri Lanka Muslim

கைத்தறி, பதிக் புடைவை இறக்குமதியை நிறுத்த தீர்மானம்

IMG_20200419_123831

Contributors
author image

Editorial Team

கைத்தறி மற்றும் பதிக் புடைவை இறக்குமதியை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

இத்தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்களை முன்னேற்றுவதற்கும் மேலும் உற்பத்தியாளர்களை இத்துறைக்குள் ஈர்ப்பதற்கும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

புடைவை மற்றும் ஆடை கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் புடைவைகளைப் பயன்படுத்தி உற்பத்திசெய்யப்படும் ஆடைகளுக்கு பதிலாக, உள்நாட்டு உற்பத்தி சார்ந்த ரெடிமேட் ஆடைகளுக்கு அதிக சந்தை வாய்ப்பை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் பெருமளவு அந்நியச் செலாவணியை மீதப்படுத்த முடியுமென, ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka