அதிக பயணிகள் ஏற்றுவது தொடர்பில் ’1955க்கு முறையிட முடியும் » Sri Lanka Muslim

அதிக பயணிகள் ஏற்றுவது தொடர்பில் ’1955க்கு முறையிட முடியும்

phone6

Contributors
author image

Editorial Team

ஆசன எண்ணிக்கையைவிடக் கூடுதலாகப் பயணிகளை ஏற்றும் பஸ்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால், புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, 1955 என்ற துரித சேவை இலக்கத்துடன் தொடர்புகொண்டு, இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்யுமாறு, ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரேன்டா தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 பரவலையடுத்து, பஸ்களில் ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிகள் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், மேற்படி நடைமுறையை மீறும் வகையில், ஒருசில தனியார் பஸ்களில் கூடுதலாகப் பயணிகளை ஏற்றிச்செல்கின்றமை குறித்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றுதாக, தேசிய போக்குவரத்து அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka